முகப்பு மின் நிகண்டு

அறிமுகம்

தமிழ் மின் நிகண்டு

Visual Thesaurus for Tamil

    தமிழ் மின் நிகண்டு அகராதி போல் அல்லாது தொடர்புடைய ஓரினப்பொருளைச் சுட்ட வெவ்வேறான உணர்பொருள்  (Connotations) சொற்களால் உணர்த்தும். இம்மின் நிகண்டு மூலம் ஒரு சொல்லுக்கு எத்தனைப் பொருள்கள் உள்ளன என்பதையும் கண்டறியலாம்.

        இம் மின் நிகண்டு தற்காலத் தமிழ் மொழிக்கு ஏற்றவாறு தயாரிக்கப்பட்டதால் பழங்கால நிகண்டுகளில் காணப்படுகின்ற தற்போது பெரும்பாலும் வழக்கிலில்லாத சொற்களைச் சுட்டிக் காண்பிக்கவில்லை.

        சான்றாக ‘காற்று’ என்ற சொல்லைக் கொடுக்கப்பட்டுள்ள அகர வரிசை அட்டவணையிலிருந்து தேர்ந்தெடுத்து தேடினால் காற்றிற்கான அனைத்துப் பொருள்களும் பல வண்ணங்களில் திரையில் தோன்றும்.

        ஒவ்வொரு வண்ணமும் ஒத்தத் தன்மையுள்ள சொற்களை உணர்த்தும். ஒவ்வொரு சொல்லை சொடுக்கினாலும் அவற்றுள் ஒத்தத் தன்மையுள்ள சொற்கள் தோன்றும்.

        ‘காற்று’ என்ற சொல்லுக்கு ‘வாடை’ ‘தென்றல்’ ‘கொண்டல்’ ‘கோடை’ என நான்கு சொற்கள் ஓரே வண்ணத்தில் தோன்றும். இந்நான்கு சொற்களும் நான்கு திசைகளிலிருந்து வீசுவதைக் குறிப்பதால் ஓரே வண்ணத்திற்குள் அடக்கப்பட்டுள்ளன.


        அதுபோன்றே மற்ற எல்லா சொற்களும் ஒரு பொதுமையின் அடிப்படையில் ஒன்று சேர்க்கப்பட்டு ஒரு வண்ணத்தினுள் அடக்கப்பட்டுள்ளன.

        மேலே கூறியதுபோல் சொற்களைப் பாகுபடுத்தி பல வண்ணங்களில் காட்டும் போது பயனர் சுலபமாக தமிழ் மொழியின் சொற்களை இடத்திற்கு தகுந்தாற்போல் சரியானதொரு சொல்லைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்த முடியும்.

        தற்பொழுது முன் மாதிரி எடுத்துக்காட்டுச் சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் சொற்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன. இம் மின் நிகண்டு சொல்லின் முன் வெறும் வளையம் மட்டும் காணப்பட்டால் அச்சொல்லுக்கு இன்னும் ஒத்தத் தன்மையுள்ள சொற்கள் சேர்க்கப்படவில்லை என்று கொள்ளலாம். அதே சமயத்தில் சொல்லின் முன்னுள்ள வளையம் முழுவதும் வண்ணம் காணப்படின் அவற்றுள் ஒத்தத் தன்மையுள்ள சொற்கள் சேர்க்கப்ப்பட்டுள்ளன என்று கொள்ளலாம்.

மேல்